Wednesday, June 1, 2011

25 வயதுக்கு கீழ் மது அருந்தினால் அபராதம்

மராட்டியத்தில் தற்போது 21 வயதிலிருந்து மது பானங்கள் வாங்க, குடிக்க சட்டப்பூர்வ அனுமதி உள்ளது. இந்த நிலையில், மராட்டியத்தில் மது அடிமைக்கு எதிராக மாநில அரசு புதிதாக கொள்கை ஒன்றை கொண்டு வர உள்ளது.

இது தொடர்பாக மாநில மந்திரிசபை கூட்டம் முதல் அமைச்சர் பிரிதிவிராஜ் சவான் தலைமையில் மும்பையில் நடந்தது.

இந்த கூட்டத்தில், 25 வயதுக்குட்பட்டோர் மது பானம் வாங்குவதும், குடிப்பதும் சட்டவிரோதமான குற்றம் என்னும் அரசின் புதிய முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் பீர் வாங்குவதற்கும், பருகுவதற்கும் வயது வரம்பு 21 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொது விழாக்களில், நிகழ்ச்சிகளில் மதுபானங்கள் பரிமாறவும் அரசு தடை விதித்து விட்டது. இனி 25 வயதுக்குட்பட்டோர் மராட்டியத்தில் மதுபானங்கள் பருகினால் அபராதம் விதிக்கப்படும்.

மேலும் கல்வி நிறுவனங்கள், சமூக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வழிபாட்டுத்தலங்கள், நெடுஞ்சாலைகளுக்கு ஒரு கி.மீ. தொலைவில் மதுக்கடைகள் இருக்க அனுமதி இல்லை. ஒரு மாநகராட்சி வார்டு பகுதியில் மதுக்கடையை மூடுமாறு அதில் குடியிருப்போரில் 25 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்தால் அதை மூடிவிட வேண்டும்.

தனி நபர் வாங்குகிற மது பாட்டில்களின் அளவுக்கும் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது.

மதுபானங்கள் வாங்குவதற்கும், பருகுவதற்கும் 25 வயது ஆகி இருக்க வேண்டும் என்ற வரம்பு டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் அமலில் உள்ளது. இப்போது மராட்டியமும் அந்த பட்டியலில் சேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: நக்கீரன்.காம்



நமது தமிழ்நாடு அரசும், புதுச்சேரி அரசும் இதுபோன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருங்காலத் தலைமுறையினரை காப்பாற்றவேண்டும்.

2 comments:

sathishsangkavi.blogspot.com said...

நம்ம ஊர்ல இப்படி ஒரு சட்டம் போட்ட தேவல...

seeprabagaran said...

தற்போதைய சூழலில் மதுவிலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது. என்றாலும் உடனடியாக ஒருசில கட்டுப்பாடுகளை கொண்டுவர அரசு முயற்சிக்க வேண்டும்.