Tuesday, November 23, 2010
பீகார் தேர்தல் - நிதிசுகுமார் வாழ்க!
இந்தத்தேர்ததில் கங்கிரசின் வெற்றி ஒற்றை இலகத்திலேயே சுருக்கப்பட்டுள்ளது. மக்களுக்காக உண்மையாக உழைக்கும் தலைவரை அடையாளங்கண்டு காங்கிரசு-சோனியா-இராகுல் போன்ற வேடதாரிகளை பீகார் மக்கள் புறக்கணித்துள்ளனர்.
தமிழகத் தலைவர்களும் தமிழர்களுக்கு துரோகம் செய்யாமல் தமிழர்களின் நலனுக்காக உண்மையாக உழைத்தால் காங்கிரசை அண்டிப்பிழைக்கும் நிலைக்கு ஆளாகத்தேவையில்லை. தமிழர்களுக்காக உண்மையாக உழைக்கும் ஒருதலைவர் கிடைக்கமாட்டாரா?
Thursday, April 15, 2010
மஞ்சள் விருது!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு “வாழும் புரட்சியாளர்” தலைமையில் வாழும் தலைவர்களுக்கு வாழ்ந்த தலைவர்களின் பெயரில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 14-ஆம் (சித்திரை 1) நாள் சிறப்பாக நடைபெற்றது. (இதற்கான விளம்பரங்கள் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தை அலங்கரித்தன. கூடவே தமிழகம்-புதுச்சேரியில் ஆங்காங்கே ஒருசில சலசலப்புகளும் ஒருசில கலவரங்களும் வந்தன.)
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் விருதுபெற்ற அனைவருக்கும் விருதும் ஐம்பதாயிரம் ரூபாய் பொற்கிழியும், நீலநிற பட்டாடையும் அணிவிக்கப்பட்டது. ஆனால் கருணாநிதிக்கு மட்டும் அம்பேத்கர் சுடர் என்று எழுதப்பட்ட ”மஞ்சள்” நிற பட்டாடை அணிவிக்கப்பட்டது.
இந்த “மஞ்கள் நிறம்” அம்பேத்கரை முதன்மைப்படுத்துவதற்காகவா அல்லது கருணாநிதியை முதன்மைப்படுத்துவதற்காகவா என்பது விளங்கவில்லை. இனிவரும் காலங்களில் விடுதலைச்சிறுத்தைகளால் வழங்கப்படும் “அம்பேத்கர் சுடர்” விருதுக்கு வழங்கப்படும் பட்டாடைகள் அனைத்தும் “மஞ்சள் நிறத்திலேயே” இருக்குமா என்றும் தெரியவில்லை. ஏனெனில் செயலலிதாவிற்குபிடித்த நிறம் “பச்சை”.
படம் உதவி: தினத்தந்தி
Wednesday, March 31, 2010
பென்னாகரம்: பா.ம.க.வின் வெற்றி?
மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்திலும் வெற்றி பெற முடியாமல் போனதும், இனி தமிழகத்தில் கூட்டணிகள் உருவாகும் போது பா.ம.க.வுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படாது என்ற சூழ்நிலை இருந்தது. ஆனால் அக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மட்டுமே, "ஏற்கெனவே படுதோல்வியை சந்தித்த கட்சிகள் கூட சில ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியையே பிடிக்க முடிந்துள்ளது என்பதை சுட்டிக் காட்டி பா.ம.க. அழிந்துவிடவில்லை' என்று கூறிவந்தார்.
இருந்தாலும் அரசியல் வட்டாரத்தில் அவரது பேச்சுக்கு யாரும் அதிக முக்கியத்துவம் தரவில்லை. எனவே தங்கள் செல்வாக்கை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் பா.ம.க.வுக்கு ஏற்பட்டது. பென்னாகரம் இடைத்தேர்தல் இதற்கு நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது.
1996-ல் அக் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி பா.ம.க. சார்பில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி என்பதால் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க அவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்தது.மற்ற இடைத்தேர்தல்களைப் புறக்கணித்து வந்த பா.ம.க. இந்த இடைத் தேர்தலில் தீவிரமாக களமிறங்கியது.
வெற்றி பெறுவோம் என்று வெளியில் கூறினாலும், தங்கள் செல்வாக்கை நிரூபிக்கும் அளவுக்கு வாக்குகள் வாங்க வேண்டும் என்பதே இக் கட்சியின் குறிக்கோளாக இருந்தது. இப்போது சட்டப்பேரவைக்குச் செல்லும் வாய்ப்பை பாமக வேட்பாளர் பெற முடியாமல் போனாலும், கட்சியின் கொடியை தூக்கிப் பிடிக்கும் அளவுக்கு வாக்குகளைப் பெற்றுவிட்டார் என்று கட்சியினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பா.ம.க. 41,285 வாக்குகளைப் பெற்றுள்ளது. அதுவும் எந்தக் கட்சியுடனும் கூட்டு இல்லாமல் தனித்தே இவ்வளவு வாக்குகளைப் பெற்றுள்ளது.2009-ல் மக்களவைத் தேர்தல் நடந்தபோது பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் செந்தில் 32,753 வாக்குகள் பெற்றார். அப்போது அதிமுகவுடன் கூட்டணி இருந்தது. இப்போது தனித்தே 41 ஆயிரம் வாக்குகளை பா.ம.க. பெற்றுள்ளது என்பது திமுக மற்றும் அதிமுகவில் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
தொகுதியில் 15 ஆயிரம் வாக்குகள் இருந்தாலே, தாங்கள் இல்லாமல் எந்தக் கூட்டணியும் வெற்றி பெற முடியாது என்று ஒரு கட்சியால் கூற முடியும். ÷இப்போது பா.ம.க. 41 ஆயிரம் வாக்குகள் பெற்றிருப்பதால் 2011 தேர்தலுக்கான கூட்டணியை உருவாக்குவதில் மீண்டும் பா.ம.க. முக்கிய இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக ஆரம்பத்தில் இருந்தே தீவிரமாக பணியாற்றாமல், கடைசியில் ஜெயலலிதா வருகை நேரத்தில் மட்டும் தீவிரம் காட்டியதே அக் கட்சி வேட்பாளர் டெபாசிட் தொகையை இழந்திருப்பதற்கு காரணம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
முந்தைய இடைத்தேர்தல்களைப் புறக்கணித்ததால் தொண்டர்களிடையே ஏற்பட்ட ஆர்வக் குறைவு, நிர்வாகிகள் மீதான அதிருப்தி, ஆரம்பத்தில் இருந்தே தீவிர பிரசாரம் செய்தாதது ஆகியவையே தங்களின் மோசமான தோல்விக்குக் காரணம் என்கின்றனர் அதிமுகவினர்.
தேமுதிகவைப் பொருத்தவரை 2006 தேர்தலைவிட இப்போது சுமார் 600 வாக்குகள்அதிகம் கிடைத்துள்ளது. இடைத் தேர்தலில் பெரிய கட்சிகளின் கடுமையான போட்டிக்கு இடையே இவ்வளவு வாக்குகளைப் பெற முடிந்தது அந்தக் கட்சியினருக்கு ஆறுதலாகவே இருக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ÷2009 மக்களவைத் தேர்தலில் இந்த சட்டப் பேரவைத் தொகுதியில் தேமுதிகவுக்கு கிடைத்த வாக்குகள் 19239 என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். அதை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டால் தேமுதிகவின் வாக்குகளில் சரிவு ஏற்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது.
அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் கூட்டணியில் இடம் பெறாமல் போனால் கட்சியின் செல்வாக்கு மேலும் குறையத்தான் வாய்ப்பு இருக்கிறது என்று பரபரப்பாக வாக்கு எண்ணும் இடத்தில் கட்சித் தொண்டர்கள் பேசிக் கொண்டனர்.
திமுகதான் தமது முதல் எதிரி என்று கடந்த வாரம் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். தேர்தல் பிரசாரத்திலும் திமுகவை அவர் கடுமையாகச் சாடினார்.
பா.ம.க.வினர் அதிமுகவை அதிகம் விமர்சிக்கவில்லை. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அந்தக் கூட்டணியில் இருந்து பா.ம.க. விலகியது என்றாலும், மறுபடி கூட்டணி என்று வரும் போது வாக்கு விவரங்கள்தான் பேசப்படும் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
மேலும் பென்னாகரம் தொகுதியை மட்டும் வைத்து அரசியல் கணிப்பைக் கூற முடியாது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். 1996-ம் ஆண்டிலேயே தனித்து வென்ற தொகுதி பென்னாகரம். இதே செல்வாக்கு மற்ற தொகுதிகளிலும் இருக்குமா என்பதையும் பார்க்க வேண்டும் என்பது அவர்களின் கருத்து.
இதையும் கருத்தில் கொண்டே முக்கிய கட்சிகள் கூட்டணி வியூகங்களை வகுக்கும். வெற்றியா, தோல்வியா என்பதில் வேண்டுமானால் பா.ம.க. தோற்றிருக்கலாம். ஆனால் பெரிய கட்சிகளை சிந்திக்க வைக்கும் அளவுக்கு வாக்குகள் வாங்கியிருப்பதே பா.ம.க.வைப் பொருத்த வரையில் வெற்றிதான் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
ஆளும் திமுகவை அடுத்த சட்டப் பேரவைத் தேர்தலில் எதிர்கொள்ள பாமக, தேமுதிக, மதிமுக மற்றும் இடதுசாரிகளை உள்ளடக்கிய மெகா கூட்டணி ஒன்றை அதிமுக உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். பென்னாகரம் இதற்குப் பிள்ளையார் சுழி போட்டிருப்பதாக முக்கிய அதிமுக பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
நன்றி தினமணி 31.03.2010
Monday, March 15, 2010
ஏன் இந்த அவசரம்?







Thursday, March 4, 2010
மனித மூளையை கழிவறையாக்கும் ஊடகங்களை புறக்கணிப்போம்!
காசுக்காக உடலை விற்கும் ஒரு விலைமாதரிடம் இருக்கும் குறைந்த பட்ச நேர்மைகூட இன்று ஊடகங்களுக்கு இல்லை என்பதே உண்மை. மக்கள் பணத்தில் மக்களுக்கே நஞ்சுவைக்கும் பணிகளையே இன்றை ஊடகங்கள் சிறப்பாக செய்து வருகின்றன. இதை ஒழுங்குபடுத்த வேண்டி அரசு இயந்திரமும், ஆட்சியாளர்களும் தங்கள் இச்சைகளை தீர்க்கவே ஊடகங்களுக்கு எலும்புத்துண்டுகளை வீசி வளர்க்கின்றன.
ஒருகாலத்தில் மஞ்சள் பத்திரிக்கை, நீலப்படங்கள் போன்றவைகள் மறைமுகமாகவே வாசிக்கப்பட்டன. இன்று இவைகள் மட்டுமே வெளிப்படையாக விற்கப்படுகின்றன. இவைகளை விற்பவர்களும் வாங்குபவர்களும் இதற்காக குறைந்தபட்சம் வெட்கப்படுவதுகூட கிடையாது. மாறாக அவர்களே மக்களை காக்கும் இரட்சகர்களாக உலாவருகின்றனர்.
பேருந்து நிலைய கழிப்பறை நாற்றம் தாங்காமல் மூக்கை பிடிக்கும் நாம்; மக்களின் மூளையை கழிவறையாக்கும் ஊடகங்களை ஏன் புறக்கணிக்கக்கூடாது?
எதை மூடிமறைக்க “நித்யானந்தா படம்” தொடர்ந்து காட்டப்படுகிறது?
கடந்த இருபது ஆண்டுகளாக நமது நாட்டில் நிகழும் எந்தவொரு முக்கிய பிரச்சனையும் மக்களின் கவனத்திற்கு செல்லவில்லை என்பதும், அப்பிரச்சனைகளை மக்கள் ஒருபோதும் கவனிக்கக்கூடாது என்பதிலும், இதையும் மீறி ஒருசிலர் அப்பிரச்சனையை கையிலெடுத்து போராடும்போது அதை மழுங்கடிப்பதிலும் ஒடுக்குவதிலும் ஆட்சியாளர்கள் தொடர்ந்து வெற்றி பெருகிறார்கள் என்பதும் உண்மையிலும் உண்மை...
கடந்த இரண்டு நாட்களாக ஆளுங்கட்சியினரின் குடும்பத்திற்கு சொந்தமான ஊடகங்களில் ஒரு சாமியாருடன் ஒரு நடிகை உறவு கொண்டதை படம் பிடித்து தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள்.
இந்நிகழ்வு உலகின் அதி முக்கிய நிகழ்வாக அரைமணி நேரத்திற்கு ஒருமுறை “சன் நியூஸ்” தொலைக்காட்சியில் தொடர்ந்து காட்டப்படுகிறது. சன் குழுமத்திற்கு சொந்தமான நாளேடுகளும் அந்தப்படங்களை அச்சிட்டு வெளியிட்டுள்ளன.
தி.மு.க.வின் ஆதரவு இதழான “நக்கீரன்” போன்ற புலனாய்வு இதழ்களும் இந்த படங்களை அட்டையில் அச்சிட்டு தமிழ்நாடு முழுவதும் தொங்கவிட்டுள்ளன. அவர்களுடைய இணையதளத்திலும் பின்னணி இசை, பாடல்கள் போன்றவற்றை இணைத்து இப்படத்தை ஓடவிடுகிறார்கள். பணம் கட்டினால் முழுபடத்தையும் பார்க்கலாம் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஊடகங்கள் எதிர்பார்த்தபடி நாடு முழுவதும் இந்த படுக்கையறை படங்கள் மக்களால் மனதளவில் இரசிக்கபடுகின்றன. உதட்டளவில் வெறுக்கப்படுகின்றன. சுயசிந்தனை உள்ளவர்களுக்கு இது தொடர்பாக பல்வேறு ஐயங்கள் எழுகின்றன.
33 வயதுடைய ஒரு இளைஞன் ஒரு பெண்ணின் முழு சம்மதத்துடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்று இந்த நாட்டில் எப்போது சட்டம் போட்டார்கள் என்று தெரியவில்லை...
சட்டப்படியான எந்தவொரு புகாரும், விசாரனையும் நடைபெறாமல் இப்படத்தை வெளியிட இவர்களுக்கு யார் அனுமதியளித்தது என்றும் தெரியவில்லை...
ஆபாச படங்களை வெளிப்படையாக விற்றாலோ, வெளியிட்டாலோ இந்த நாட்டில் குற்றம் என்று யாரோ சொன்னதாகக் கேள்வி... இந்த நாட்டின் ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறையிலும் இந்த ஆபாசப்படம் இரண்டு நாட்களாக தொடர்ந்து காட்டப்படுகிறது... சிறப்பு அனுமதி பெற்று இப்படம் காட்டப்படுகிறது என்று நாம் நம்புவோமாக...
“காதலும் காமமும் உயிர் இயற்கை அல்ல. இன்று முதல் இந்த நாட்டில் இவை தடைசெய்யப்படுகிறது. தேவைப்படுபவர்கள் சன் குழுமத்திடம் முன் அனுமதி பெறவேண்டும். மேலும் ஒரு HD resolution கேமராவை பக்கத்தில் வைத்துக்கொண்டுதான் இதில் ஈடபடவேண்டும்.” என்ற அறிவிப்பு எதிர்வரும் நிதிநிலை அறிக்கையில் எதிர்பார்க்கலாம். (சன் குழுமத்திற்கு பிட்டுபட பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் எந்த ஏற்பாடு)
..............................................
ஆட்சியாளர்களின் செயல்பாடுகளால் மக்கள் பாதிக்கப்படும் போதும், அவர்கள் மீது மக்கள் வெறுப்படையும் போதும் அது தங்கள் மீதான கோபமாக மாறிவிடக்கூடாது என்பதற்காக மக்களின் கவனத்தை திசைத்திருப்ப நமது ஆட்சியாளர்கள் பல்வேறு தந்திரங்களை கையாளுகிறார்கள்.
குறிப்பாக,
அரசியல் நாடகங்களை நடத்துவது...
சலுகைகளை அறிவிப்பது....
விழாக்களை நடத்துவது...
கிரிக்கெட் போட்டி நடத்துவது...
அரசியல் எதிரிகள் அல்லது ஏதாவது ஒரு தலைவரை தாக்குவது... அல்லது அவர்கள் மீது புழுதிவாரி தூற்றுவது... அதனால் உருவாகும் எதிர்விளைவுகளை செய்தியாக்குவது... கேள்வி பதில் அறிக்கை வெளியிடுவது.... எதிர்விளைவுகளை அடக்குவது...
என்கவுண்டர் நடத்துவது...
நாட்டின் ஏதாவது ஒரு மூலையில் நடக்கும் காமளியாட்டங்களை படம்பிடித்து செய்தியாக்குவது...
என கணக்கிலடங்கா யுக்திகளை கையாள்கிறார்கள்.
அந்த வரிசையில் தற்போது சுவாமி நித்யானந்தா-நடிகை ரஞ்சித பாலுறவு படம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால்,
தன் நலனைத்தவிர வேறு எதைப்பற்றியுமே சிந்திக்காத “சன் குழுமம்” இந்தப் படத்தை அரைமணிநேரத்திற்கு ஒருமுறை கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து வெளியிட்டு வருவதுதான் நமக்கு மேலும் ஐயத்தை ஏற்படுத்துகிறது.
இந்தச் செய்தியால் மக்கள் சிந்திக்க மறந்த நிகழ்வுகள் ஏராளம்...
நாடாளுமன்றம் கூடும் போதெல்லாம் பிரதமர் மண்மோகன் சிங் வெளிநாடு செல்வது...
நடுவணரசு வெளியிட்டுள்ள நிதிநிலை அறிக்கை...
விலைவாசி ஏற்றம்...
வேளாண் உற்பத்தியில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்தது...
மரபணுமாற்ற உணவுப்பொருட்களுக்கு எதிராக போராடுபவர்களை ஒடுக்க சட்டம் கொண்டுவர இருப்பது...
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது...
இராகுல் காந்தி என்ற ஒரு கட்சித் தலைவர் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று தொடர்ந்து அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவது...
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது என “மண்”மோகன் சிங் மக்களின் முகத்தில் அடிதார்போல் சொல்வது...
இந்திய அரசின் வெளியுறவ கொள்கை தோற்றுப்போனது...
இந்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்துவருவது...
நடுவண் அரசுக்கு கருணாநிதி எந்தக் கடிதம் எழுதினாலும் சோனியா அதை தூக்கி குப்பைத் தொட்டியில் போடுவது...
கருணாநிதியின் தொடர் தமிழினத் துரோகம்...
விளைநிலங்களை தொழில் வளர்ச்சியின் பேரால் அழிப்பது...
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஆட்சியாளர் ஆயிரகணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கிக் குவிப்பது...
அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் 4 பேர் காவல்துறையினர் விரட்டியடித்ததால் செத்தது...
இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்நாடு சட்டமன்றத்தின் புதிய கட்டிடத்தை முழுமையாக கட்டி முடிக்காமல் கொத்துங் குறையுமாக ஒப்பேற்றி... திரைப்பட கலை இயக்குனர் தோட்டாதரணியை வைத்து 2 கோடி ரூபாய்க்கு செட்டு போட்டு திறக்க முயற்சிப்பது...
என ஓராயிரம் நிகழ்வுகள் மறைப்பட்டுள்ளன...
வாழ்க! “சன... நாய... கம்...”
Wednesday, March 3, 2010
சன் பிக்சர்ஸ்-நக்கீரன் இணைந்து வழங்கும் “நித்யானந்தா”
இத்திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் போன்ற பணிகளை சிறப்பாகச் செய்த படைப்பாளிகளின் பெயர்கள் பாதுகாப்பு கருதி கமுக்கமாக வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது வழங்கும் விழாவில் இவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும்.
Thursday, February 4, 2010
பேரறிஞர் இராகுல் காந்தி இன்று புதுச்சேரி வருகை!
பேரறிஞரும், பேராசிரியரும், முனைவரும், இந்தியாவின் முன்னாள் பிரதமர் நேருவின் கொள்ளு பேரனும், இந்திரா காந்தியின் பேரனும், இராஜுவ் காந்தியின் மகனும், தற்போதைய பிரதமரை இயக்குபவருமான சோனியா காந்தி அவர்களின் தவப்புதல்வரும் இந்நாட்டின் இளவரசனுமாகிய ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ. இராகுல் காந்தி அவர்கள் புதுச்சேரி பல்கலை கழகத்தில் மாணவர்களுடன் உரையாட உள்ளா...ர்...
இன்று விமானம் மூலம் சென்னை வரும் அவர், அங்கிருந்து உலங்கு வானூர்தி மூலம் புதுச்சேரி வருகிறா...ர்...
நாட்டுமக்களின் அறிவையும் ஆற்றலையும் பெருக்க புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள “இராஜீவ் காந்தி மட்டைப்பந்து விளையாட்டுத் திடலை” திறந்து வைக்கிறா...ர்...
பிறகு “வாக்குரிமை மற்றும் ஜனநாயகம்” என்னும் தலைப்பில் மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளா...ர்...
இதைத் தொடர்ந்து பல்கலைக்கழகம் அருகேயுள்ள ஒரு விடுதியில் நடைபெறும் இளைஞர் காங்கிரசு கூட்டத்தில் பங்கேற்கிறா...ர்...
இது தொடர்பான ஒளிப்பட தொகுப்பு இரண்டு நாட்களுக்கு அனைத்து ஊடகங்களிலும் காட்டப்படும்...
இதைப்பார்த்து நாட்டுமக்கள் அனைவரும் குதுகலிக்க வேண்டும்...
இதுவே இந்திய பேரரசின் மேன்மைபெருந்திய சோனியா மகாராணியாரின் விருப்பம்...................
மேலும் இந்நிகழ்வுகளில் சுயசிந்தனையாளர்களும் மான உணர்வு உள்ளவர்களும் கண்டிப்பாக கலந்து கொள்ளக்கூடாது என அறிவிக்கப்படுகிறது...
டும்... டும்....
டும்... டும்....
டும்... டும்...
டுடும்.... டுடும்.... டுடும்...
முக்கிய அறிவிப்பு: கூட்டத்தில் கலந்துகொள்ளும் யாரும் பின்வரும் ஐயத்தை இளவரசரிடம் கேட்டுவிடக்கூடாது. மீறி கேட்டால் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்...
ஐயம்-1: மகாத்மா காந்திக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எந்தவித இரத்த உறவும் இல்லாத நீங்கள் உங்கள் பெயருக்கு பின்னால் “காந்தி” என்ற பட்டத்தை ஏன் சேர்த்துக் கொண்டீர்கள்.
ஐயம்-2: தங்கள் குடும்பப் பெயரான “காண்டி” எதற்காக “காந்தி” என்று மாற்றப்பட்டது.
ஐயம்-3: இந்த நாட்டை ஆள நேரு குடும்பத்தைத் தவிர வேறு யாருக்கும் தகுதி இல்லையா?
ஐயம்-4: மக்களாட்சி நடைபெறுவதாக சொல்லப்படும் இந்த நாட்டில்; ஆண்டவர்களின், ஆட்சியாளர்களின் காதலின் அடையாளமாகவோ, காமத்தின் கழிவிலோ பிறந்தவர்களுக்குத்தான் நாட்டை ஆளும் சூழல் தற்போது இருப்பது ஏன்?
இது அரசு ஆணை....
டும்... டும்....
டும்... டும்....
டும்... டும்...