Thursday, March 4, 2010

மனித மூளையை கழிவறையாக்கும் ஊடகங்களை புறக்கணிப்போம்!

நாட்டின் வாழ்வாதாரமே கேள்விகுறியாக்கப்பட்டுள்ள இன்றை சூழலில், பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய ஊடகங்கள் இன்று விபச்சாரத்தையே முதன்மையான தொழிலாக செய்து வருகின்றன.

காசுக்காக உடலை விற்கும் ஒரு விலைமாதரிடம் இருக்கும் குறைந்த பட்ச நேர்மைகூட இன்று ஊடகங்களுக்கு இல்லை என்பதே உண்மை. மக்கள் பணத்தில் மக்களுக்கே நஞ்சுவைக்கும் பணிகளையே இன்றை ஊடகங்கள் சிறப்பாக செய்து வருகின்றன. இதை ஒழுங்குபடுத்த வேண்டி அரசு இயந்திரமும், ஆட்சியாளர்களும் தங்கள் இச்சைகளை தீர்க்கவே ஊடகங்களுக்கு எலும்புத்துண்டுகளை வீசி வளர்க்கின்றன.

ஒருகாலத்தில் மஞ்சள் பத்திரிக்கை, நீலப்படங்கள் போன்றவைகள் மறைமுகமாகவே வாசிக்கப்பட்டன. இன்று இவைகள் மட்டுமே வெளிப்படையாக விற்கப்படுகின்றன. இவைகளை விற்பவர்களும் வாங்குபவர்களும் இதற்காக குறைந்தபட்சம் வெட்கப்படுவதுகூட கிடையாது. மாறாக அவர்களே மக்களை காக்கும் இரட்சகர்களாக உலாவருகின்றனர்.

பேருந்து நிலைய கழிப்பறை நாற்றம் தாங்காமல் மூக்கை பிடிக்கும் நாம்; மக்களின் மூளையை கழிவறையாக்கும் ஊடகங்களை ஏன் புறக்கணிக்கக்கூடாது?

6 comments:

Balu said...

Every individual has to think about this. Since each political party is having one or more channels, they can do anything to attract the people.

ரோஸ்விக் said...

சரியாக சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே!. முடிந்தால் இதோடு தொடர்புடைய எனது பதிவையும் பார்க்கவும்.

(நா)மீறிப்போன மீடியாவின் மிடுக்கு...!

seeprabagaran said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி!

போலிச்சாமியார்கள் மட்டுமல்ல... அனைத்துப் போலிகளையும் அம்பலப்படுத்த வேண்டியது நமது கடமை.

ஜோதிஜி said...

இணைப்பு தற்காலிகமாக துண்டிக்கப்பட்டு மூன்று நாட்களாக ஆகி விட்டது. இப்போதைக்கு பயமாக இருக்கிறது. வேறு வழி தெரியவில்லை. நம்முடைய ஆசைகளை குழந்தைகளும் பார்க்கும் சூழ்நிலை. ஒரு வகையில் பார்த்தால் போதை தான் இது. உணரும் போது தான் புரிகிறது.

seeprabagaran said...

ஜோதிஜி அவர்களுக்கு நன்றி,

மதுவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் தமிழனை முட்டாளாக்கும் பணியை தொலைக்காட்சிகள் மிகச்சிறப்பாகவே செய்கிறது.

தமிழனிடம் உள்ள மிகப்பெரிய கோளாறு; பொதுவான சிக்கல்களை அவனுடைய வீட்டிலும் உற்றார் உறவினர்களிடமும் பேசுவதில்லை. வெளியில் பகுத்தறிவு, இனவுணர்வு, மானஉணர்வு, அரசியல் என இயங்குபவர்கள்கூட பெரும்பாலும் இவைகளைப்பற்றி தன் உறவுகளிடம் பேசுவதில்லை. அதற்கான வாய்ப்பும் தமிழ் குடும்பங்களில் இல்லை.

தமிழனின் வாழ்நாளை வேலை, நோய், மது, கடவுள், தொலைக்காட்சி போன்றவை முழுமையாக விழுங்கிவிடுகின்றன.

பட்டாபட்டி.. said...

yes buddy.. what you say is correct..