Saturday, March 20, 2010

சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு இனி கிடையாது: அம்பிகா சோனி

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இந்திய அரசால் நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி 2011-ல் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்தப்பணிகள் நாடுமுழுவதும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இதற்காக 3539.24 கோடியில் ரூபாயில் மக்கள் தொகை பதிவேட்டை ஏற்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மக்களுக்கு சிறந்த சேவையளிக்கவும் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும் இந்த மக்கள் தொகை பதிவேடு உதவியாக இருக்கும் என்று அரசால் கூறப்படுகிறது.

மக்கள் பதிவேடு திட்டத்தின் ஓர் அம்சமாக கைரேகை பதிவு, அங்க அடையாளங்களை குறிப்பிட்டு அடையாள அட்டை வழங்கப்படும். ஒவ்வொரு அடையாள அட்டைக்கும் ஒரு எண் வழங்கப்படும். இதனால் வெளிநாட்டவர் தங்குவதையும் பயங்கரவாதிகள் ஊடுருவுவதையும் தடுக்க முடியும். 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் பெற்றோரின் அடையாள அட்டையுடன் சேர்க்கப்படுவார்கள் என அமைச்சர் அம்பிகா சோனி கூறியுள்ளார்.

மேலும் “சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு இனி கிடையாது.” என்றும் கூறியுள்ளார்.

நாட்டு மக்களின் உணர்வுகளும் நியாமான கோரிக்கைகளும் இந்திய ஆட்சியாளர்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பது மீண்டும் ஒருமுறை நிறுபிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: சாதிவாரியான கணக்கெடுப்பு 1936-ல் ஆங்கிலேயனால் எடுக்கப்பட்டதோடு சரி. “உங்களுக்கு ஆட்சிசெய்யத் தெரியாது” என்று ஆங்கிலேயன் நம்மைப்பார்த்து சொன்னது ஏனோ இப்போது நினைவுக்கு வருகிறது.

2 comments:

ஜீவன்சிவம் said...

சாதி ரீதியான கணக்கெடுப்பின் அவசியம் என்ன...

seeprabagaran said...

ஜீவன்சிவம் அவர்களுக்கு வணக்கம்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1936-ஆம் ஆண்டுதான் சாதிரிவாரியான கணக்கெடுக்குப்பு கடைசியாக நடத்தப்பட்டது. அந்த தரவுகளின் அடிப்படிடையிலே தற்போது இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. விடுதலை பெற்ற இந்தியாவில் இத்தகைய கணக்கெடுப்பு எதுவும் நடத்தப்படவில்லை.

நமது நாட்டில் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வுகளை களையவேண்டும் என்றால்; வரையறுக்கப்பட்ட காலத்திற்கோ அல்லது நிரந்தரமாகவோ சாதிவாரியான இடஒதுக்கீடு தேவை.

இப்போது உள்ள இடஒதுக்கீட்டு முறை ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரவர்க்கத்தினரின் மனம்போன போக்கிலேயே உள்ளது.

அந்தந்த சமூதாயத்தில் எத்தனைபேர் உள்ளனர்? அவர்களின் தற்போதைய சமூகபொருளாதார நிலை என்ன? என்பது பற்றி எந்தவொரு உண்மையான தரவுகள் இல்லாமல் நாட்டுமகளுக்கான சமூகநீதியை எப்படி நிலையாட்ட முடியும்?