Thursday, February 4, 2010

பேரறிஞர் இராகுல் காந்தி இன்று புதுச்சேரி வருகை!

இதனால் நாட்டுமக்களுக்கு அறிவிக்கப்படுவது யாதெனில்,

பேரறிஞரும், பேராசிரியரும், முனைவரும், இந்தியாவின் முன்னாள் பிரதமர் நேருவின் கொள்ளு பேரனும், இந்திரா காந்தியின் பேரனும், இராஜுவ் காந்தியின் மகனும், தற்போதைய பிரதமரை இயக்குபவருமான சோனியா காந்தி அவர்களின் தவப்புதல்வரும் இந்நாட்டின் இளவரசனுமாகிய ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ. இராகுல் காந்தி அவர்கள் புதுச்சேரி பல்கலை கழகத்தில் மாணவர்களுடன் உரையாட உள்ளா...ர்...

இன்று விமானம் மூலம் சென்னை வரும் அவர், அங்கிருந்து உலங்கு வானூர்தி மூலம் புதுச்சேரி வருகிறா...ர்...

நாட்டுமக்களின் அறிவையும் ஆற்றலையும் பெருக்க புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள “இராஜீவ் காந்தி மட்டைப்பந்து விளையாட்டுத் திடலை” திறந்து வைக்கிறா...ர்...

பிறகு “வாக்குரிமை மற்றும் ஜனநாயகம்” என்னும் தலைப்பில் மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளா...ர்...

இதைத் தொடர்ந்து பல்கலைக்கழகம் அருகேயுள்ள ஒரு விடுதியில் நடைபெறும் இளைஞர் காங்கிரசு கூட்டத்தில் பங்கேற்கிறா...ர்...

இது தொடர்பான ஒளிப்பட தொகுப்பு இரண்டு நாட்களுக்கு அனைத்து ஊடகங்களிலும் காட்டப்படும்...

இதைப்பார்த்து நாட்டுமக்கள் அனைவரும் குதுகலிக்க வேண்டும்...

இதுவே இந்திய பேரரசின் மேன்மைபெருந்திய சோனியா மகாராணியாரின் விருப்பம்...................

மேலும் இந்நிகழ்வுகளில் சுயசிந்தனையாளர்களும் மான உணர்வு உள்ளவர்களும் கண்டிப்பாக கலந்து கொள்ளக்கூடாது என அறிவிக்கப்படுகிறது...

டும்... டும்....
டும்... டும்....
டும்... டும்...
டுடும்.... டுடும்.... டுடும்...

முக்கிய அறிவிப்பு: கூட்டத்தில் கலந்துகொள்ளும் யாரும் பின்வரும் ஐயத்தை இளவரசரிடம் கேட்டுவிடக்கூடாது. மீறி கேட்டால் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்...

ஐயம்-1: மகாத்மா காந்திக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எந்தவித இரத்த உறவும் இல்லாத நீங்கள் உங்கள் பெயருக்கு பின்னால் “காந்தி” என்ற பட்டத்தை ஏன் சேர்த்துக் கொண்டீர்கள்.

ஐயம்-2: தங்கள் குடும்பப் பெயரான “காண்டி” எதற்காக “காந்தி” என்று மாற்றப்பட்டது.

ஐயம்-3: இந்த நாட்டை ஆள நேரு குடும்பத்தைத் தவிர வேறு யாருக்கும் தகுதி இல்லையா?

ஐயம்-4: மக்களாட்சி நடைபெறுவதாக சொல்லப்படும் இந்த நாட்டில்; ஆண்டவர்களின், ஆட்சியாளர்களின் காதலின் அடையாளமாகவோ, காமத்தின் கழிவிலோ பிறந்தவர்களுக்குத்தான் நாட்டை ஆளும் சூழல் தற்போது இருப்பது ஏன்?

இது அரசு ஆணை....

டும்... டும்....
டும்... டும்....
டும்... டும்...

2 comments:

Thevesh said...

உங்கள் நியாயமானகேழ்விகளுக்கு விடை கிடையாது. காரணம் இந்திய
மக்களின் ஜீன்சில் நாங்கள்அடிமைகள்
ராஜாவின்கட்டளைக்குக்கட்டுப்பட்டவர்
கள் என்ற உணர்வு பரம்பரைபரம்பரை
யாக அவர்கள்இரத்தத்தில்ஊறிப்போய்
விட்டது.வெள்ளைக்காரரின் இடத்தில்
நேரு குடும்பத்தை இராசாஇராணியாக
ப்பாவித்து அவர்களுக்குஅடிமைச்சேவ
கம் செய்து வருகிறார்கள்.இன்னும் ஆயிரம் வருடம் சென்றாலும் நேரு
வீட்டு நாய்கூட இந்தியப்பிரதமர் கதிரையை ஆக்கிரமிக்கும் காங்கிரஸ்
காரர் ஜால்றா அடிப்பார்கள்.

seeprabagaran said...

தேவஷ் அவர்களுக்கு வணக்கம்,

நேரு குடும்பத்திடமிருந்து நாட்டை காப்பாற்றுவது மானமுள்ள ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.

மாற்றவேண்டும் என மக்கள் நினைத்தால் எதுவும் முடியும்...