Wednesday, February 24, 2010

“தமிழ்” தொழில் நிறுவனங்களுக்கு ஆகாதா? ஒத்துவராதா?

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு பெரிய நிறுவனத்தில் என்னுடைய நண்பர் வேலை செய்கிறார். அவருக்கு தமிழில் மின்னஞ்சல் அனுப்பும் வழிமுறைகளையும் ஒருங்குகுறி எழுத்துருக்களையும் கற்றுக்கொடுத்தேன். அவரும் உற்சாகமாக கற்றுக்கொண்டார். அந்த ஆர்வத்தில் அவருடைய விடுப்பு விண்ணப்பத்தை தமிழில் தட்டச்சு செய்து மின்னஞ்சல் மூலம் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்தார்.

அந்த தமிழ் மின்னஞ்சலை படித்த அவருடைய உயர்அதிகாரிகள் இருவர் என் நண்பரை காய்ச்சி எடுத்துவிட்டனர். “ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டு தமிழில் லீவ் லட்டர் எழுதுறீங்களே! உங்களுக்கு வெட்டகமாக இல்லையா?” என்று கேட்டுள்ளனர். அவர் அதற்கு ஒரு வழியாக மன்னிப்பு கேட்டுவிட்டு “இனிமேல் அப்படி செய்யமாட்டேன்” என்று சொல்லி இந்த பிரச்சனையை ஒருவழியாக சமாளித்துள்ளார்!

இதுபற்றி என்னிடம் கூறி வருத்தப்படார். என்னுடைய நண்பரிடம் அவர்களுடைய உயர்அதிகாரிகளைப் பற்றி விசாரித்தேன். அவருடைய உயர் அதிகாரிகளில் ஒருவர் கும்கோணம் பார்ப்பான், மற்றொருவர் மலையாள பார்ப்பான். அவர்கள் இருவருக்கும் தமிழில் எழுத, படிக்க, பேச நன்கு தெரியுமாம்.

நம்புங்கள்! நாம் விடுதலை பெற்றுவிட்டோம்!

2 comments:

முத்துக்குமார் அழகப்பன் said...

/நம்புங்கள்! நாம் விடுதலை பெற்றுவிட்டோம்!/
தமிழினம் இன்னும் விடுதலை பெறாததையே இது காட்டுகிறது.

seeprabagaran said...

அழகப்பன் அவர்களுக்கு நன்றி!

தமிழ்நாட்டில் உள்ள அரசு-தனியார் நிருவாக நடைமுறைகளில் தமிழை கொண்டுவர தமிழர்களாகிய நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதே நம்முன் உள்ள கேள்வி.