Thursday, April 1, 2010

தி.மு.க. தலைவர் பதவிக்கு தகுதியானவர்கள் யாருமே இல்லையா?

தி.மு.க. தமிழ்நாட்டு மக்களின் இனமான உணர்ச்சியால் உருவான கட்சி என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆயிரக்கணக்கான உண்மையான தொண்டர்களின் உழைப்பாலும் தியாகத்தாலும் உருவான தி.மு.க. என்ற மக்கள் இயக்கத்தை ஒரு குடும்பச்சொத்தாக மாற்றிய பெருமை கருணாநிதியை சேரும். இந்த இயக்கத்தை தனது குடும்பச்சொத்தாக மாற்ற கருணாநிதி நடத்திய நாடகங்கள் ஏராளம்.

தி.மு.க. தொடர்ந்து தனது குடும்பச்சொத்தாக இருக்க நல்ல கதை வசனத்தோடு புதிய நாடகத்தை எப்போதோ எழுதி முடித்துவிட்டார். தற்போது தனது வாரிசுகளை அந்த நாடகத்தில் நடிக்க வைத்து இயக்கிக்கொண்டிருக்கிறார் என்பதை கருணாநிதி உணர்ந்தவர்கள் நன்கு அறிவார்கள்.

இந்த நாடகத்தின் சம்பவங்களை நிகழ்த்தியவர், நிகழ்த்துபவர், நிகழ்த்த இருப்பவர் கருணாநிதியே. இந்த நாடகத்தில் அவரே தற்போது ஒரு முடிச்சைப் போட்டுள்ளார். அதற்காக அவர் எழுத்திய வசனங்களை அவருடைய துடுக்கு மகன் அழகிரி தற்போது பேசிவருகிறார்.

“கருணாநிதிக்குப் பிறகு யாரையும் தலைவராக நான் ஏற்க மாட்டேன்; அவர் இடத்தை நிரப்பும் தகுதியும் திறமையும் யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை”

... நான் கூறிய கருத்தில் எந்தவித மாற்றமும் இல்லை.

“நான் எண்ணுவதைக் கூறுவதற்கு எனக்கு உரிமை உள்ளது. என் மனசாட்சிப்படிதான் இது தொடர்பாக முதன்முதலில் எனது கருத்தைக் கூறினேன்.”“

“தி.மு.க.வில் ஜனநாயக ரீதியில் கட்சி மூலம் மட்டுமே தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளதை ஏற்கிறேன்.”“

“திமுக ஜனநாயகக் கட்சி என்பதால், கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டி ஏற்பட்டால் நான் போட்டியிடுவேன். அதற்கு இப்போது அவசியம் இல்லை.
ஏனெனில், திமுக தலைவராக முதல்வர் கருணாநிதி இருப்பதால், அந்தப் பதவி பற்றி பேசத் தேவையில்லை.”

இப்போது மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக இருக்கிறார். எதிர்காலத்தில் கட்சிக்கு தேவைப்பட்டால் நான் போட்டியிடுவேன்“

போன்ற வசனங்கள் அழகிரியால் சிறப்பாக பேசப்பட்டுள்ளது.


“கருணாநிதிக்குப் பிறகு யாரையும் தலைவராக நான் ஏற்க மாட்டேன்; அவர் இடத்தை நிரப்பும் தகுதியும் திறமையும் யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை” என்று சொல்லிவிட்டு தனக்கு மட்டுமே அந்தத் தகுதி இருப்பதாக அழகிரி அப்போதே சொல்லியிருந்தால் நாடகத்தின் “கிளைமேக்ஸ்” உடனே வந்துவிடும். பிறகு நாடகத்தில் எந்த விருவிருப்பும் இருக்காது என்பது நாடக ஆசிரியர் கருணாநிதிக்கு நன்றாகவே தெரியும். அதனால் கிளைமேக்சை கொஞ்சம் தள்ளி வைத்துள்ளார்.

“தி.மு.க.” நாடக ஆசிரியர் கருணாநிதி போட்ட முடிச்சை மக்கள் வியக்கும்படி அவரே அவிழ்ப்பார் என்பதை நம்புவோமாக!
.......................

இந்த நாட்டில்,

“மக்களாட்சியின் பெயரால் நடைபெறும் அரசியல் நாடகத்தில் குடிமக்கள் மிகச்சாதாரண பார்வையாளர்களாக மட்டுமே இருக்கமுடியும்...

நாடகத்தில் நடிக்கும் நடிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு நடிக்கும்போது அவர்கள் வீசும் கத்தி பார்வையாளர்களான நம்மீது விழுந்தால் நமக்கு சாகமட்டுமே தகுதியுண்டு, உரிமையுண்டு...

செத்துப்போன பார்வையாளனின் குடும்பத்தினர் ஆட்சியாளர்கள் சொல்லும்போது மட்டுமே அழவேண்டும்...

தேவைப்பாட்டால் செத்தவன் “என் மகன் இல்லை” என்று சொல்வதற்கும் அவனை பெற்றவர்கள் தயாராக இருக்கவேண்டும்.”
....................
நாடகம் நடக்கட்டும்! வாழ்க!! வளர்க!!!

3 comments:

Anonymous said...

நாடகம் நடக்கட்டும்! வாழ்க!! வளர்க!!! //
பணம்..காசு நிறைய இருந்தாலும் அதிகாரம் இல்லைனா இவங்க ஒரு மணி நேரம் கூட வாழமுடியாது

ஜோதிஜி said...

உண்மையான தண்டனைகள் என்னவென்று காலம் இனிமேல் ஒவ்வொன்றாக புரியவைக்கும். அப்போது தெரியும்?

seeprabagaran said...

காலம் கடந்த தீர்ப்பாலோ, தண்டனையாலோ எந்தப்பயனும் இல்லை.

கருணாநிதி என்ற ஒரு நச்சு விதை இன்று ஆலமரமாக வளர்ந்து பல ஆயிரம் நச்சுவிதைகளை இந்த மண்னில் விதைத்துள்ளது. இவைகளை ஒட்டுமொத்தமாக வீழ்த்தினால் ஒழிய நாட்டை காப்பாற்ற முடியாது.