Thursday, April 15, 2010

மஞ்சள் விருது!



விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு “வாழும் புரட்சியாளர்” தலைமையில் வாழும் தலைவர்களுக்கு வாழ்ந்த தலைவர்களின் பெயரில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 14-ஆம் (சித்திரை 1) நாள் சிறப்பாக நடைபெற்றது. (இதற்கான விளம்பரங்கள் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தை அலங்கரித்தன. கூடவே தமிழகம்-புதுச்சேரியில் ஆங்காங்கே ஒருசில சலசலப்புகளும் ஒருசில கலவரங்களும் வந்தன.)

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் விருதுபெற்ற அனைவருக்கும் விருதும் ஐம்பதாயிரம் ரூபாய் பொற்கிழியும், நீலநிற பட்டாடையும் அணிவிக்கப்பட்டது. ஆனால் கருணாநிதிக்கு மட்டும் அம்பேத்கர் சுடர் என்று எழுதப்பட்ட ”மஞ்சள்” நிற பட்டாடை அணிவிக்கப்பட்டது.

இந்த “மஞ்கள் நிறம்” அம்பேத்கரை முதன்மைப்படுத்துவதற்காகவா அல்லது கருணாநிதியை முதன்மைப்படுத்துவதற்காகவா என்பது விளங்கவில்லை. இனிவரும் காலங்களில் விடுதலைச்சிறுத்தைகளால் வழங்கப்படும் “அம்பேத்கர் சுடர்” விருதுக்கு வழங்கப்படும் பட்டாடைகள் அனைத்தும் “மஞ்சள் நிறத்திலேயே” இருக்குமா என்றும் தெரியவில்லை. ஏனெனில் செயலலிதாவிற்குபிடித்த நிறம் “பச்சை”.


படம் உதவி: தினத்தந்தி

2 comments:

ஜோதிஜி said...

பச்சை நிறத்தை தொடர்ந்து வருவது பச்சோந்தி அரசியல் விருது

seeprabagaran said...

கருணாநிதி இறுதிக்காலத்தில் முழுமையாக அம்பலப்பட்டார்...

திருமா வளரும்போதே அம்பலமானார்...

தமிழினம் இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் துரோகிகளால் தொடர்ந்து வீழப்போகிறது என்று தெரியவில்லை...