Thursday, July 15, 2010

“சீமான்”களை தூக்கிலிடு!

காட்டிக் கொடுக்கூட்டிக் கொடு
கொலை செய் கொள்ளையடி
அதிகாரத்தைக் கைப்பற்று – இதுதான்
அரசியல் அறிச்சுவடி

மக்களை மந்தை களாக்கு
மாண்பு மிகுக்களை மாமாக்களாக்கு
பட்டியில் அடை – மக்களாட்சி
இதுவென்று முரசுகொட்டு

பட்டியிலடைத்த மந்தைகள் கேட்கா
தனைத்தையும் இலவசமாகக் கொடு
தவணையில் கொடு – பிச்சையென்றுரைத்தால்
கொடையென்று சொல்

அன்பு அகிம்சையென்று பசப்பு
பண்பைப் பேணென்றுரைத்து மக்களை
அடித்து அடக்கு – அதுதான்
சட்ட ஒழுங்கென்றுரை

உழைக்கும் மக்களை ஊதாரிகளாக்கு
மதுவாறு ஓடவிட்டு காமக்கிழத்திகளை
வீடுதோரும் ஆடவிடு – பொற்கால
ஆட்சியென்பது இதுவே

நிலமும் நீரும் காற்றும்
ஆகாயமும் பொதுவென்றுரை முன்னேற்றம்
வேண்டுமென கூவு – தரகுக்கூலிக்காக
மாற்றானுக்கு அனைத்தையும் விற்றுவிடு

அந்தப்புரத்தை அதிகார மையமாக்கு
காமத்தின் கழிவில் முளைத்த
காளான் களனைத்தையும் – பட்டத்துக்
குரியவர்களென்று பறைசாற்று

உன் சிம்மாசனத்திற்கு ஆசைப்படும்
வாரிசுகளுக்கு போட்டி வை
மோதவிடு! மோதிவிடு! – பலிகடாவாக்கு
தொண்டனை மட்டும்

போதாதென்றால் காளான்களனைத்தையும் களமிறக்கு
அவர்களுக்குள் மோதட்டும்! மோதட்டும்!
மோதிக்கொண்டே இருக்கட்டும்! – மன்னன் நீதான்
கட்டையில் போகும்வரை

குடும்பத்தை எட்டுத்திக்கும்அனுப்பு கிடைத்ததைச்சுருட்டு
பொதுவுடமை பேசுவோரை பொல்லாப்பாக்கு – பொதுவுடமையின்
குறியீடென் குடும்பமென்றுரை

எதிரியோடு மண்டை நாட்டோடும்
அன்புப் பாராட்டு கேட்டதனைத்தும்
கொடுத்துதவு மகிழ்வோடு – “இறையாண்மை“
இருவருக்கும் இன்றியமையாதது

உன்குடி மக்களை கொன்றொழித்தாலும்
எதிரியோடு கொஞ்சிக் குலாவு
விருந்துண் குதூகலி – அவன்வீசும்
எலும்புத்துண்டை கவ்வு

மெதுவாகக்கடி! நீகடிக்கு மெலும்பு
மானமுள்ள மறவனின் குறுத்
தெலும்பாக இருந்தாலும் – அதுவுமுன்னை
கொல்லும் எச்சரிக்கை!

எச்சரிக்கை! எச்சரிக்கை! செய்கின்றேன்
இனமானம் மொழிமானம் தன்மானமென்று
மக்களை பேசவிடாதே – அத்தனையும்
நீயே பேசு

நல்வித்துக்கள் நாட்டில் அங்கொன்றும்
இங்கொன்றும் வளரத்தான் செய்யும்
அவைகளைகண்டு அஞ்சாதே – அணைத்துப்பார்
இல்லையெனில் அழித்துவிடு

இனமானம் பேசும்நெடு மாறன்களை
நாடுகடத்து சீறும்சீமான்களை தூக்கிலிடு
முழங்கும்நா வைகோடாரிக் – காம்பால்
குத்தி நசுக்கு

மறவன் நீயேகதியென சரணடைந்தால்
விட்டுவைக்காதை அப்போதே கடித்துக்குதறு
குருதிக்கவிச்சை குமட்டினால் – இரண்டுநாழிகை
எதுவுமுண்ணாமல் கடற்கரையில்கிட

பாலகரின் குருதியுனக்கு போதையேற்றும்
அந்தப்புரத்தில் புலவர்கூட்டத்தை பாடவிடு
நடனமாதரை யுன்போதை – தெளியும்வரை
ஆடையவிழ்த்து ஆடவிடு

மானங் கெட்டவர்களே நாட்டில்
நடமாடமுடியு மென்பதை உலகுக்குணர்த்து
கொண்டாடு! கொண்டாடு! - நான் மட்டுமே
தலைவனென்று கொண்டாடு!

குற்றத்தில் முதிர்ந்தகரு

19 comments:

Anonymous said...

அருமையான ஆழமான வரிகள்...

Anonymous said...

சிந்தனைத் தூண்டும் சீற்றமிகு வரிகள்

அ.வெற்றிவேல் said...

அப்பா!!! என்ன கோபம்.. கோபத்தில் நனும் பங்கெடுதுக் கொள்கிறேன்

கண்ணன்.கா said...

arumayana alamana vrigal nanri suranaiyula manidhare, iranthu pona manthathi uyirpikum muyartchi nantru

Kannan.K

தமிழன் said...

தலைப்பை பார்த்து கோபத்தோடு வந்தேன் அதுவும் இனமான தலைவர் பெயரில் ஒரு கருங்காலிய என்று, உங்கள் கோபத்தில் நானும் பங்கு கொள்கிறேன். தவறாக நினைத்ததிற்கு மன்னிப்பு கோருகிறேன்.

முத்தரசு said...

நன்றி

உண்மையேலையே இந்த கவிதை - தமிழா தூங்கியது போதும் - விழித்து கொள்.

கவிமதி said...

அருமை தோழரே
பெயருக்கேற்றபடியே சீறியிருக்கிறீர்கள்.
இந்த கவிதையை எனக்கு தெரிந்த எல்லா தளங்களுக்கும் கொண்டுச்செல்கிறேன் உங்கள் அனுமதியோடு.

Jazeela said...

அருமை. முகநூலில் பகிர்கிறேன்.

nayanan said...

தில்லி முகவர்கள் கழகங்களின் கால்கள் ஆடுகின்றன. தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் துவங்கிவிட்டன

fitness paradise said...

தற்போதைய தமிழகத்தின் தமிழ் தாய் வாழ்த்து !

seeprabagaran said...

பின்னூட்டமிட்ட தோழர்கள் அனைவருக்கும் நன்றி!

இனமானம் உள்ள எவர்வேண்டுமானாலும் இக்குமுறலை பயன்படுத்திக்கொள்ள அனுமதியளிக்கிறேன்.

தமிழினத்திற்கு துரோகம் செய்தவர்களையும் செய்பவர்களையும் தமிழர்கள் ஒருபோதும் மறக்கவும்கூடாது மன்னிக்கவும் கூடாது.

மேலும் இப்படிப்பட்டவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் இனமானம் பேசுபவர்களாக இருந்தாலும் அவர்களையும் சந்தேகப்படவேண்டும் என நினைக்கிறேன். தான் செய்த வரலாற்றுத் தவறுகள் அனைத்தையும் அலசி ஆராய்ந்து நல்ல நண்பர்களுடன் சேர்ந்து விலக்கவேண்டியவர்களை விலக்கி செயல்பட தமிழர்கள் ஆயத்தமாக வேண்டும்.

lara rajkumar said...

தலைப்பை பார்த்து கோபத்தோடு வந்தேன் அதுவும் இனமான தலைவர் பெயரில் ஒரு கருங்காலிய என்று, உங்கள் கோபத்தில் நானும் பங்கு கொள்கிறேன். தவறாக நினைத்ததிற்கு மன்னிப்பு கோருகிறேன்.

சிவராஜ் said...

This must be published on Daily news papers,let it reach all.

தமிழ் நாடன் said...

இந்திய சட்டப்படி தேடப்படும் ஒரு குற்றவாளி பிரதமருடன் கூடி குலாவலாம். இதனால் இந்திய இறையாண்மை பாதிக்கப்படாது! இந்திய நாட்டின் ஒரு குடிமகன் வஞ்சிக்கப்படுகின்ற தன் சொந்தங்களுக்காக குரல் கொடுத்தால் இறையாண்மை பாதிக்கப்பட்டுவிடும்! என்னே இவர்கள் நீதி! அடுத்தவன் கேட்டால் வாயால் சிரிக்கமாட்டான்...........

தமிழ் நாடன் said...

அருமையான கவிதை! ஆனால் இவர்களுக்கெல்லாம் உறைக்குமென்றா நினைக்கிறீர்கள்??

anbu said...

அருமையான படைப்பு.உள்ளத்துள் கொந்தளிக்கும் இயல்பான உணர்வுகளை எல்லோருக்கும் தோன்றும் எண்ண அலைகளை கவிதை ஆக்கி தந்துள்ளீர்கள்.பாராட்டுக்கள்.
கல்யாண வீட்டில் மாப்பிள்ளையாகவும், இழவு வீட்டில் பிணமாகவும் இருக்க ஆசைப்படும் இந்த அற்பர்களை தோலுரித்துக்காட்டி விட்டீர்கள்.

seeprabagaran said...

தமிழ்நாடன் அவர்களுக்கு வணக்கம்.

நான் கவிஞன் அல்ல.
நானொரு தமிழின உணர்வாளன்.

கடந்த ஆண்டு தமழீழத்தில் நடைபெற்ற தமிழின அழிப்புப்போரையும், அதனை தடுக்கமுடியாத தமிழ்நாட்டு தமிழனின் கையாலாகத்தனத்தையும், காங்கிரசும்-தி.மு.க.வும் தமிழினத்திற்கு செய்த தொடர் துரோகச் செயல்களையும் எண்ணியெண்ணி மனஅழுத்தத்திற்கு ஆளாகியிருந்தேன். இதனால் எனக்கு உயர் குருதி அழுத்த நோய் வந்ததுதான் மிச்சம்.

முல்லிவாய்க்கால் படுகொலைக்குமுன் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டு உணர்ச்சிப்பெருக்கோடு முழக்கங்களை எழுப்பியது உணர்வுகளுக்கு வடிகாலாய் இருந்தது. தற்போது வெற்றுமுழக்கங்கள் சலிப்பை ஏற்படுத்தியுள்ளது. உணர்வுகளை வெளிப்படுத்த வழிதெரியவில்லை... அதனால் எழுத்தினேன்.

உலகம் முழுவதுமுள்ள தமிழின உணர்வாளர்கள் அனைவரும் சோனியா, கருணாநிதி போன்றோரின் தமிழின துரோகத்தை எண்ணி புழுங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

ஜோதிஜி said...

பிரபாகரன் உங்கள் திறமை நான் ஏற்கனவே நான் அறிந்ததே.

நல்ல ஆக்கம். சரியான தாக்கத்தையும் உருவாக்கியது.

seeprabagaran said...

ஜோதிஜி அவர்களுக்கு வணக்கம்.