Saturday, September 4, 2010

வெற்றியா? வெட்கக்கேடா?

“இந்தியாவில் காங்கிரஸ் கட்சி அழிந்தால்தான் இந்த நாடு உருப்படும்” என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. நாடு விடுதலை அடைந்தபோதே காங்கிரஸ் கட்சி கலைக்கப்பட்டிருக்க வேண்டும். நேருவின் சுயநலத்தால் அது நடைபெறாமல் போனது. தற்போது அந்த கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றதாம்! சோனியாகாந்தி நான்காவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துவிட்டாராம்! ஊடகங்கள் கொண்டாடுகிறது...

தற்போது உள்ள காங்கிரஸ் கட்சியின் உண்மையான பெயர் என்னவென்று தெரியவில்லை. (யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்) சோனியாகாந்தி தலைமையிலான அரசியல் கட்சியின் பெயரில் “காங்கிரஸ்” என்றும் நேரு குடும்பத்தின் பெயருக்குப்பின்னால் “கேண்டி” என்ற பெயர் திரித்து “காந்தி” என்று ஒட்டிக்கொண்டு இருப்பதாலேயே அந்த கட்சி நாட்டுக்கு விடுதலை வாங்கித்தந்த கட்சி என மீண்டும் மீண்டும் பரப்புரை செய்யப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி நேரு குடும்பத்தின் சொத்தாக மாற்றப்பட்டதன் மூலம் இந்த நாடும் நேரு குடும்பத்தின் சொத்தாக மாறிவிட்டது. இந்தியாவில் நடைபெறும் ஆட்சி “மக்களாட்சியின் பெயரில் நடைபெறும் மன்னராட்சி” என்றால் அது மிகையில்லை. மன்னாராட்சி காலத்தில்கூட மன்னனின் நேரடி வாரிசுக்கே பட்டம் சூட்டிக்கொள்ளும் உரிமை இருந்ததாக சொல்லப்படுகிறது. இன்றைய வல்லரசு இந்தியாவில் மன்னனிடமோ மன்னனின் வாரிசுகளிடமோ வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு வழியில் முந்திவிரித்து பிள்ளை பெற்றுக்கொண்டால் போதும் நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றி விடலாம் என்ற நிலை உள்ளது... இந்த நாட்டின் குடிமக்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம் இதற்காக வெட்கப்படப்போவதில்லை...


நேரு குடும்பத்தின் குடும்ப அட்டவனை இணையதளத்தில் கிடைத்தது அதையும் கொஞ்சம் பாருங்கள்...10 comments:

மதுரை சரவணன் said...

thanks for sharing. true.

ramalingam said...

இந்த லட்சணத்தில் நாலு முறை என்ன, நாற்பது முறை கூடத் தேர்ந்தெடுப்போம் என்ற ஊளை வேறு.

seeprabagaran said...

மதுரை சரவணன் அவர்களுக்கு நன்றி

seeprabagaran said...

இராமலிங்கம் அவர்களுக்கு நன்றி!

seeprabagaran said...

இந்த நாட்டை எதிர்காலத்தில் மிகப்பெரிய பேரவலத்திலிருந்து காப்பாற்ற வேண்டுமென்றால் சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சியை முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும்.

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் செயல்படவேண்டும் என்பதே இந்தப்பதிவின் நோக்கம்.

மருது said...

நண்பர் பிரபாகரன் அவர்களுக்கு வணக்கம் ..
உங்களது இந்த பதிவிற்கு வாழ்த்துக்கள்.. மேலும் இத்துடன் சிறிது திருத்தத்தையும் இங்கு கூற முன் விளைகிறேன் ..

1. இந்தியாவுக்கு காங்கிரஸ் என்ற கட்சியோ காந்தி என்ற தனி மனிதரோ சுதந்திரம் வாங்கித் தரவில்லை. இன்னும் சொல்லப் போனால் இந்த நாடு இன்னும் முழுச் சுதந்திரம் அடையவில்லை. ஆட்சி வெள்ளையர்களிடம் இருந்து இந்தியக் கைக்கூலிகளுக்கு கை மாற்றி விடப்பட்டது. அவ்வளவு தான்..

2. காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டதற்கான காரணம் தெரியுமா நண்பரே ?.. இந்திய நாட்டில் 1857ல் நடந்த சிப்பாய் புரட்சிக்கு பிறகு மிரண்டு போன வெள்ளையர்கள அரசாங்கம். மக்கள் பொங்கும் போதெல்லாம் அவர்களின் போராட்ட உணர்வை அடக்கி வைப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு தான் காங்கிரஸ். அதன் நிறுவனர் ஒரு வெள்ளைக்காரன் என்பது இன்று நாட்டில் எத்தனை பேருக்குத் தெரியும் .


முடிவாக ஒரே வரியில் முடிப்பதானால் ஆரம்பித்த நாள் முதலே .. காங்கிரஸ் என்றால் துரோகம், துரோகம் என்றால் காங்கிரஸ் ..

seeprabagaran said...

தோழர் மருது அவர்களுக்கு வணக்கம். தாங்கள் தெரிவித்துள்ள கருத்துக்கு நான் உடன்படுகிறேன்.

காங்கிரசு கட்சியின் அழிவும் இந்த நாட்டிற்கு விடிவாக இருக்கும் என நம்புகிறேன்.

ஜோதிஜி said...

வாய்ப்பு இருக்கும்ன்னு நினைக்கிறீங்களா பிரபாகரன்?

seeprabagaran said...

ஜோதிஜி அவர்களுக்கு வணக்கம்.

“இந்தியா” என்ற ஒரு நாடு இருக்கும் வரை காங்கிரஸ் கட்சி ஏதாவது வடிவில் நேரு குடும்பத்தின் கட்டுப்பாட்டிலோ அல்லது ஏதாவது ஒரு கொள்ளைக்கூட்டத்தின் பிடியிலோ இருக்கும்.

பன்னாட்டு நிறுவனங்களும், இந்தியாவின் பெருமுதலாளிகளும், இந்திய சமூகத்துக்கு எதிரானவர்களும் காங்கிரஸ் கட்சியை அழிய விடமாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு அதுவொரு சிறந்த பங்குசந்தை.

நாட்டுமக்களை எளிதில் விலைபேசி வாங்கி விற்கும் ஆற்றல் படைத்தவர்கள்தான் காங்கிரஸ் கட்சியை இயக்கிக்கொண்டிருக்கிறார்கள்... அவர்கள் மிகவும் பலம்வாய்ந்தவர்கள்...
எந்தவொரு புரட்சியின் மூலமாகவோ ஆயுத போராட்டங்களின் மூலமோ அவர்களை வீழ்த்த முடியாது. ஏனெனில் மக்களுக்காக உழைத்தவர்களை மக்களுக்காக ஈகம் செய்தவர்களை மக்கள் எளிதில் மறந்து விடுகிறார்கள்....

இருப்பினும் இவ்வுலகையும், நாட்டு மக்களையும் நேசிப்பவர்கள் முழுமையாக அழிந்துவிடவில்லை... மக்களை தயார்படுத்துவோம்...
இவ்வுலகியல் முயன்றால் எதுவும் சாத்தியமே...

மனசாட்சி said...

நேருவை நாம் எப்படி கூப்பிடுவோம் ..... அந்த வார்த்தைன் அர்த்தம் என்ன - அதை நேரு தெளிவா செய்துவிட்டு சென்றுள்ளார்