Saturday, November 20, 2010

ஸ்பெக்ட்ரம் ஊழலை “நக்கீரன்” கண்டுகொள்ளாது ஏன்?

ஸ்பெக்டரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது என்பது ஓரளவுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊழலின் தொகை எவ்வளவு? யார் யாருக்கு எவ்வாளவு தொகை பங்கு பிரிக்கப்பட்டுள்ளது? பங்கு ஒழுங்காக பிரிக்கப்பட்டுள்ளதா? என்பது போன்ற தகவல்கள்தான் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை.

அதற்குப் பிறகு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து!!!!!!!!! விசாரணை நடத்தி!!!!!!!!!! வாய்தா வாங்கி!!!!!!!!!!! வழக்கு நடத்தி!!!!!!!!!!! இவ்வளவு பெரிய தவறு செய்த பெரிய மனிதர்களை சட்டம் தண்டிக்கும் என குடிமக்களாகிய நாம் நம்பித்தான் ஆக வேண்டும். (நம்புவோமாக!)

தமிழ்நாட்டில் நடைபெறும் அரசியல் அத்துமீறல்களை, ஊழல்களை, மனித உரிமை மீறல்களை புலணாய்வு செய்து “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என எதற்கும் அஞ்சாமல்(!!!!!) செய்தி வெளியிடும் “நக்கீரன்” வாரம் இருமுறை இதழ், ஸ்பெக்டரம் ஊழலைப்பற்றி பட்டும் படாமல் செய்தி வெளியிடுகிறது. அதுமட்டுமின்றி இந்த ஊழலில் ஆ.இராசாவும் தி.மு.க.வும் தவறே செய்யவில்லை, அவர்கள் உத்தமர்கள் என்பது போன்று செய்திகளை வெளியிடுகிறது.... நெற்றிக்கண் திறந்துவிடுமோ என நக்கீரன் அஞ்சுகிறாரா என தெரியவில்லை...

அண்மையில் சவுக்கு இணையதளத்தை பார்த்தபோது தான் அதன் இரகசியம் புரியந்தது. அலைக்கற்றை ஊழலில் முக்கிய பங்குவகித்த “ஸ்வாம் டெலிகாம் நிறுவனத்தில்” நக்கீரன் துணை ஆசிரியர் காமராஜ் அவர்களும் பங்குதாரராக இருக்கிறாராம். ஆண்டிமுத்துவும், சின்னப்பிள்ளையும். http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=165:2010-11-18-12-48-20&catid=1:2010-07-12-16-58-06&Itemid=2

வாழ்க! சனாநாயகத்தின் நாண்காவது தூண்!

2 comments:

Anonymous said...

நக்கீரன் தி.மு.க ஆதரவு பத்திரிக்கை என்பதால்தான் ஜூனியர் விகடன் முன்னிலை வகிக்கிறது...தி.மு.க ஆட்சி இழந்தால் முதல் ஆப்பு நக்கீரனுக்குத்தான் என்பதால் நக்கீரன் ராசாவுக்கு ஆதரவாகவே செய்தி வெளியிடுகிறது

seeprabagaran said...

சதீஷ்குமார் அவர்களுக்கு வணக்கம். யார்? யாருக்கு ஆப்பு வைக்கிறார்கள் என்பதைப் பற்றி நாம் கவலைப்படத்தேவையில்லை. சனநாயத்தின் நான்காவது தூணானா ஊடகங்களும் ஊழலின் ஊற்றுக்கண்ணாக மாறிவிட்டதுதான் வருத்தத்திற்கு உரியது.