Friday, April 1, 2011

வைகோ அவர்களே! கற்பழிக்க வந்தவனிடம் கண்ணியமாக நடக்க வேண்டுமா?

தமிழன் காசில் தமிழினத்திற்கு துரோகமிழைப்தையே தொழிலாகக் கொண்டுள்ள “தினமலர்” நாளேடு முட்டள்தினத்தை கொண்டாடுவதற்காக வைகோ தொடர்பாக ஒரு செய்தியை நேற்று வெளியிட்டிருந்தது. இந்தச் செய்தியை படித்த மானமுள்ளத் தமிழர்கள் அனைவரும் தினமலருக்கு எதிராக கோபமுற்றனர்.

ஆனால், வழக்கம்போல் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு....


”...எத்தகைய விமர்சனங்களை எவர் நம்மீது கூறினாலும், சேற்றை வாரி இறைத்தாலும், அண்ணாவின் மணிவாசகத்தை கருதி, எதையும் தாங்கும் இதயத்தோடு பொறுத்துக் கொள்வோம்....

...கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதற்கு இலக்கணமாக இயங்குவோம்! எனவே தோழர்கள் இதுகாறும் கடைப்பிடித்து வந்த கண்ணியமான அணுகுமுறைக்கு சிறிய சேதமும் ஏற்படாவாறு ஆத்திரத்தை வெளிக்காட்டும் எவ்வித செயலிலும் ஈடுபடக் கூடாது என வேண்டுகிறேன்... என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

மரியாதைக்குரிய வைகோ அவர்களிடம் கேட்பது இதுதான்...

“கொலைவெறியோடு நம்மை குத்தவரும் எதிரியிடமும்...
காமவெறியோடு ஒரு பெண்ணின் கற்பை சூறையாடவரும் காமக்கொடூரனிடமும்...
தமிழர்கள் கண்ணியத்தோடுதான் நடந்துகொள்ள வேண்டுமா?

சாதரண கொசு, மூட்டைப்பூச்சி, எறும்பு போன்றவைகளிடமிருந்து நம்மை நாம் தற்காத்துக்கொள்ள பல்வேறு முயற்சிகளை நாம் மேற்கொள்கிறோம். தமிழினத்தை கருவறுக்க வந்த தினமலருக்கு எதிராக சிறு துரும்பையாவது எடுத்துவீச வேண்டாமா?...

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற சொற்களே தற்போது தமிழனை வெறுப்பேற்றிக்கொண்டிறுக்கிறது.

3 comments:

மர்மயோகி said...

வைக்கோ ஒரு ஊசிப்போன யாழ்ப்பாணத்து பட்டாசு,,
ஜெயலலிதா கிட்ட அடிமையாக இருந்து எவ்வளவு அடிச்சாலும் தாங்குறவன்..அதனால அவன ஒரு பொருட்டா நினைக்கவே வேண்டாம்.

Unknown said...

endru oru naal mattum dinamalar ooliyargal naragal saappiduvaargal endrum eluthi erukkalaam....

seeprabagaran said...

மர்மயோகி அவர்களுக்கு வணக்கம். வைகோ அவர்கள் ஊசிப்போன பட்டாசு அல்ல...

வைகோ அவர்களின் செல்பாடுகள் கொள்கைகள் போன்றவற்றில் நமக்கு முறன்பாடுகள் இருக்கலாம்.

ஆனால், மக்களுக்காக உண்மையாக உழைப்பவர்களை மக்கள் புறக்கணிப்பதால் ஏற்படும் இழப்பு மக்களுக்குத்தான் என்பதை தாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.