Thursday, March 4, 2010

எதை மூடிமறைக்க “நித்யானந்தா படம்” தொடர்ந்து காட்டப்படுகிறது?

ஊடகங்களை ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும், வியாபாரிகளும் கைப்பற்றிய பிறகு மக்கள் நலனும் மக்களின் சுயசிந்தனையும் அழிக்கப்பட்டுவிட்டது என்பதே உண்மை.

கடந்த இருபது ஆண்டுகளாக நமது நாட்டில் நிகழும் எந்தவொரு முக்கிய பிரச்சனையும் மக்களின் கவனத்திற்கு செல்லவில்லை என்பதும், அப்பிரச்சனைகளை மக்கள் ஒருபோதும் கவனிக்கக்கூடாது என்பதிலும், இதையும் மீறி ஒருசிலர் அப்பிரச்சனையை கையிலெடுத்து போராடும்போது அதை மழுங்கடிப்பதிலும் ஒடுக்குவதிலும் ஆட்சியாளர்கள் தொடர்ந்து வெற்றி பெருகிறார்கள் என்பதும் உண்மையிலும் உண்மை...

கடந்த இரண்டு நாட்களாக ஆளுங்கட்சியினரின் குடும்பத்திற்கு சொந்தமான ஊடகங்களில் ஒரு சாமியாருடன் ஒரு நடிகை உறவு கொண்டதை படம் பிடித்து தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிகழ்வு உலகின் அதி முக்கிய நிகழ்வாக அரைமணி நேரத்திற்கு ஒருமுறை “சன் நியூஸ்” தொலைக்காட்சியில் தொடர்ந்து காட்டப்படுகிறது. சன் குழுமத்திற்கு சொந்தமான நாளேடுகளும் அந்தப்படங்களை அச்சிட்டு வெளியிட்டுள்ளன.

தி.மு.க.வின் ஆதரவு இதழான “நக்கீரன்” போன்ற புலனாய்வு இதழ்களும் இந்த படங்களை அட்டையில் அச்சிட்டு தமிழ்நாடு முழுவதும் தொங்கவிட்டுள்ளன. அவர்களுடைய இணையதளத்திலும் பின்னணி இசை, பாடல்கள் போன்றவற்றை இணைத்து இப்படத்தை ஓடவிடுகிறார்கள். பணம் கட்டினால் முழுபடத்தையும் பார்க்கலாம் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஊடகங்கள் எதிர்பார்த்தபடி நாடு முழுவதும் இந்த படுக்கையறை படங்கள் மக்களால் மனதளவில் இரசிக்கபடுகின்றன. உதட்டளவில் வெறுக்கப்படுகின்றன. சுயசிந்தனை உள்ளவர்களுக்கு இது தொடர்பாக பல்வேறு ஐயங்கள் எழுகின்றன.

33 வயதுடைய ஒரு இளைஞன் ஒரு பெண்ணின் முழு சம்மதத்துடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்று இந்த நாட்டில் எப்போது சட்டம் போட்டார்கள் என்று தெரியவில்லை...

சட்டப்படியான எந்தவொரு புகாரும், விசாரனையும் நடைபெறாமல் இப்படத்தை வெளியிட இவர்களுக்கு யார் அனுமதியளித்தது என்றும் தெரியவில்லை...

ஆபாச படங்களை வெளிப்படையாக விற்றாலோ, வெளியிட்டாலோ இந்த நாட்டில் குற்றம் என்று யாரோ சொன்னதாகக் கேள்வி... இந்த நாட்டின் ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறையிலும் இந்த ஆபாசப்படம் இரண்டு நாட்களாக தொடர்ந்து காட்டப்படுகிறது... சிறப்பு அனுமதி பெற்று இப்படம் காட்டப்படுகிறது என்று நாம் நம்புவோமாக...

“காதலும் காமமும் உயிர் இயற்கை அல்ல. இன்று முதல் இந்த நாட்டில் இவை தடைசெய்யப்படுகிறது. தேவைப்படுபவர்கள் சன் குழுமத்திடம் முன் அனுமதி பெறவேண்டும். மேலும் ஒரு HD resolution கேமராவை பக்கத்தில் வைத்துக்கொண்டுதான் இதில் ஈடபடவேண்டும்.” என்ற அறிவிப்பு எதிர்வரும் நிதிநிலை அறிக்கையில் எதிர்பார்க்கலாம். (சன் குழுமத்திற்கு பிட்டுபட பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் எந்த ஏற்பாடு)

..............................................


ஆட்சியாளர்களின் செயல்பாடுகளால் மக்கள் பாதிக்கப்படும் போதும், அவர்கள் மீது மக்கள் வெறுப்படையும் போதும் அது தங்கள் மீதான கோபமாக மாறிவிடக்கூடாது என்பதற்காக மக்களின் கவனத்தை திசைத்திருப்ப நமது ஆட்சியாளர்கள் பல்வேறு தந்திரங்களை கையாளுகிறார்கள்.

குறிப்பாக,

அரசியல் நாடகங்களை நடத்துவது...

சலுகைகளை அறிவிப்பது....

விழாக்களை நடத்துவது...

கிரிக்கெட் போட்டி நடத்துவது...

அரசியல் எதிரிகள் அல்லது ஏதாவது ஒரு தலைவரை தாக்குவது... அல்லது அவர்கள் மீது புழுதிவாரி தூற்றுவது... அதனால் உருவாகும் எதிர்விளைவுகளை செய்தியாக்குவது... கேள்வி பதில் அறிக்கை வெளியிடுவது.... எதிர்விளைவுகளை அடக்குவது...

என்கவுண்டர் நடத்துவது...

நாட்டின் ஏதாவது ஒரு மூலையில் நடக்கும் காமளியாட்டங்களை படம்பிடித்து செய்தியாக்குவது...

என கணக்கிலடங்கா யுக்திகளை கையாள்கிறார்கள்.

அந்த வரிசையில் தற்போது சுவாமி நித்யானந்தா-நடிகை ரஞ்சித பாலுறவு படம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால்,

தன் நலனைத்தவிர வேறு எதைப்பற்றியுமே சிந்திக்காத “சன் குழுமம்” இந்தப் படத்தை அரைமணிநேரத்திற்கு ஒருமுறை கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து வெளியிட்டு வருவதுதான் நமக்கு மேலும் ஐயத்தை ஏற்படுத்துகிறது.

இந்தச் செய்தியால் மக்கள் சிந்திக்க மறந்த நிகழ்வுகள் ஏராளம்...

நாடாளுமன்றம் கூடும் போதெல்லாம் பிரதமர் மண்மோகன் சிங் வெளிநாடு செல்வது...

நடுவணரசு வெளியிட்டுள்ள நிதிநிலை அறிக்கை...

விலைவாசி ஏற்றம்...

வேளாண் உற்பத்தியில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்தது...

மரபணுமாற்ற உணவுப்பொருட்களுக்கு எதிராக போராடுபவர்களை ஒடுக்க சட்டம் கொண்டுவர இருப்பது...

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது...

இராகுல் காந்தி என்ற ஒரு கட்சித் தலைவர் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று தொடர்ந்து அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவது...

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது என “மண்”மோகன் சிங் மக்களின் முகத்தில் அடிதார்போல் சொல்வது...

இந்திய அரசின் வெளியுறவ கொள்கை தோற்றுப்போனது...

இந்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்துவருவது...

நடுவண் அரசுக்கு கருணாநிதி எந்தக் கடிதம் எழுதினாலும் சோனியா அதை தூக்கி குப்பைத் தொட்டியில் போடுவது...

கருணாநிதியின் தொடர் தமிழினத் துரோகம்...

விளைநிலங்களை தொழில் வளர்ச்சியின் பேரால் அழிப்பது...

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஆட்சியாளர் ஆயிரகணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கிக் குவிப்பது...

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் 4 பேர் காவல்துறையினர் விரட்டியடித்ததால் செத்தது...

இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்நாடு சட்டமன்றத்தின் புதிய கட்டிடத்தை முழுமையாக கட்டி முடிக்காமல் கொத்துங் குறையுமாக ஒப்பேற்றி... திரைப்பட கலை இயக்குனர் தோட்டாதரணியை வைத்து 2 கோடி ரூபாய்க்கு செட்டு போட்டு திறக்க முயற்சிப்பது...

என ஓராயிரம் நிகழ்வுகள் மறைப்பட்டுள்ளன...

வாழ்க! “சன... நாய... கம்...”

7 comments:

ஜோதிஜி said...

வாழ்த்துகள் நண்பா

manjoorraja said...

எதையோ மறைக்கத்தான் இந்த நாடகங்கள் என்பது உண்மையே

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை .......

பிருந்தன் said...

//அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் 4 பேர் காவல்துறையினர் விரட்டியடித்ததால் செத்தது...//

இதுதான் மேட்டராம் மாணவர்களின் கொலைகளினால் அரசுக்கு பெரிய அழுத்தமாம் மக்களை மறக்கவைக்கவே தாத்தாவுக்காக பேராண்டி பிட்டு படம் காட்டுறார்.

seeprabagaran said...

பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!

seeprabagaran said...

மக்கள் தமக்கான சிக்கல் என்ன? நாம் யாரால் எப்படி ஆளப்படுகிறோம்? உயர்வானவர்கள், புனிதமானவர்கள் என்று நாம் கொண்டாடும் அந்த நபர் அல்லது அந்தப்பொருள் அதற்கு தகுதியுடையதா என்பதை சிந்திக்க யாரும் தயாராக இல்லை. அப்படி சிந்திக்கவும் அதிகாரம் படைத்தவர்கள் விடுவதில்லை.

துன்பத்தில் உழலும் எந்த உயிரையும் எந்த சாமியும் காப்பாற்றாது. தன்னைச்சுற்றி நடைபெறும் எந்தநிகழ்வையும் கண்டுகொள்ளாமல், இவை ஏன்? எதனால் என்று அலசி ஆராயாமல் நடைபோடும் மாந்தர்களுக்காக வருந்துவோம்...

பெண்கள் நாட்டின் கண்கள் said...

இந்த செய்தியையும் ஊடகங்கள் படம் பிடித்துக் காட்டுமா?


http://timesofindia.indiatimes.com/arti ... page-1.cms

In South India, more the merrier
2 May 2006 Times of India


HYDERABAD/CHENNAI/BANGALORE: That engineer K Suryanarayana had two wives became public only after his murder in Afghanistan, but the revelation isn't surprising in Andhra Pradesh, indeed in most of south India.

In Tamil Nadu, bigamy is pretty much institutionalised and even has a name - Chinna veedu, which translates as 'small house' or second home. It is an age-old tradition surviving to this day despite its illegality.

When DMK was in power in the state, security agencies had a tough time providing security to two houses for many ministers, as each of them had two wives.

Whether it was the late M G Ramachandran, or M Karunanidhi, they have all had it, and flaunted it. Karunanidhi has married at least three women, the first of whom is dead.

The DMK chief (present CM) now divides his time in the houses of both wives - spending mornings at the Gopalapuram residence with Dayaluammal while moving to the house of his other wife, Rajathiammal, at CIT Nagar in Chennai in the afternoons.

Another towering Tamil actor, Gemini Ganesan, married five times while his first wife was alive. The Chinna veedu concept is fairly common in Krishnagiri and Salem districts of TN, where males believe in more the merrier.

At least one top Union minister from Tamil Nadu is known to have two wives and so does a senior DMK official, who married his daughter's classmate.

In Andhra, bigamy doesn't have the traditional sanction it enjoys in TN, but the practice is fairly widespread among the powerful and even a status symbol.