Sunday, June 6, 2010

உலகின் மிகப்பெரிய கொடுங்கோலன் ராஜபக்சவுக்கு உயரிய மரியாதையா? நாம் தமிழர்

ஈழத்தில் தமிழினத்தை கொன்றொழித்த இலங்கை அதிபர் ராஜபக்ச நாளை இந்தியா வருகிறார். அவருக்கு இந்திய அரசு இரத்தின கம்பள வரவேற்பு அளிக்க இருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. இது குறித்து நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஈழத்தில் தமிழினத்தை கொன்றொழித்த இலங்கை அதிபர் ராஜபக்சே நாளை இந்தியா வருகிறார். அவருக்கு இந்திய அரசு இரத்தின கம்பள வரவேற்பு அளிக்க இருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் பற்றிய ஆதாரங்களை வெளியிட்டுள்ளன.

உலகின் மிகப்பெரிய கொடுங்கோலர் ஒருவர் உயரிய மரியாதையுடன் இந்தியா வருவதை நினைக்கும்போது நாதியற்ற இனமா தமிழினம் என்னும் குரல் உலகம் முழுதும் எழுகின்றது.

நாதியற்ற இனமல்ல தமிழினம் என்று உலகுக்கு எடுத்து சொல்லவும், ராஜபக்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வலியுறுத்தியும், தரணியெங்கும் வாழும் தமிழர்கள் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி ராஜபக்சவின் இனப்படுகொலையை உலகுக்கு அம்பலப்படுத்தி ராஜபக்சவை தண்டித்தே தீர சூளுரை ஏற்க வேண்டும்.

ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த ராஜபக்ச மீது ஐ.நா. மன்றம் எடுத்து வரும் போர்க்குற்ற விசாரணை முயற்சிகளுக்கு இடையூறு செய்து வருவதை கண்டிக்கும் வகையில், இந்தியாவுக்கு வருகைதரும் ராஜபக்சவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் நாம் தமிழர் இயக்கத்தினர் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

நன்றி: தமிழ்வின்.காம்

2 comments:

ஜோதிஜி said...

ஆர்ப்பாட்டம் நடத்தி என்ன ஆகப்போகுது பிரபாகரன்? ஏற்கனவே டெல்லியிலே தமிழர்கள், தமிழ்நாட்டு அரசியல், தமிழ்நாட்டு தலைவர்கள் என்றாலே வாய்க்குள்ளே ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரிச்சுட்டு போயிடுறாங்களே?

அருந்ததிராய் போன்றவர்கள் பார்வையில் ஈழம் பட்டு அவர்கள் முன் எடுத்துச் சென்று இருக்க வேண்டும் என்பது போல் தோன்றுகிறது.

seeprabagaran said...

ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களின் நெஞ்சில் எழுந்துள்ள தீயை படங்காட்டியோ சரக்கு ஊற்றியோ அணைக்கும் சக்தி கருணாநிதிக்கு உண்டு. அந்தத்தீ முழுமையாக அணையாமல் கனலாக இருக்க ஆர்ப்பாட்டங்கள் உதவும் என நம்புகிறேன்.

இந்த நேரத்தில் யார் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள் என்பதும் முக்கியம்.

தமிழ்நாட்டில் மான உணர்ச்சியுள்ளவர்கள் தமிழின விடியலுக்காக என்ன செய்ய வேண்டும் என்பதை உறுதியாக தீர்மானிக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.