Wednesday, May 25, 2011

சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வி‌க்கு ‌‌மீ‌ண்‌டு‌ம் செலவு தேவையா? த‌மிழக அரசு‌க்கு உ‌‌ய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் கே‌ள்‌வி?

சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வி‌க்கு ஏ‌ற்கனவே ரூ.200 கோடி செல‌வி‌ட்டிரு‌க்கு‌ம்போது ‌மீ‌ண்டு‌ம் செலவா? எ‌ன்று த‌மிழக அரசு‌க்கு கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ள செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம், இது தொட‌ர்பாக வரு‌ம் 8ஆ‌ம் தே‌தி ப‌தி‌ல் ‌அ‌ளி‌க்கு‌ம் படி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

சமச்சீர் கல்வியை தமிழக அரசு நிறுத்தி வைத்ததை எதிர்த்து வழ‌க்க‌றிஞ‌ர் கே.ஷியாம் சுந்தர் தாக்கல் செய்து‌ள்ள பொதுநலன் மனுவில், தமிழகத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதற்காக, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் எஸ்.முத்துகுமரன் தலைமையில் நிபுணர்கள் குழுவை அமைத்து சாத்தியக்கூறுகளை முந்தைய அரசு ஆய்வு செய்தது.

கல்வியாளர்கள், பள்ளி நிர்வாகத்தினர், பெற்றோர், பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்து இந்தக் குழு தமிழக அரசிடம் 4.7.07 அன்று அறிக்கை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையை அரசு பரிசீலித்து, சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது தொடர்பாக அறிவித்தது. சமச்சீர் கல்வி தொடர்பாக விஜயகுமார் தலைமையிலும் குழு அமைக்கப்பட்டு அதன் அறிக்கையையும் அரசு பெற்றிருந்தது.

அதைத்தொடர்ந்து தமிழ்நாடு சமச்சீர் கல்வி சட்டம்-2010 கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌மு‌ம் உறுதி செய்துள்ளது. 2010-11ஆம் கல்வி ஆண்டில் ஒன்று முதல் 6ஆம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு அறிமுகம் செய்தது.

அதைத் தொடர்ந்து சமச்ச்சீர் கல்வியை 10ஆம் வகுப்பு வரை 2011-12ஆம் கல்வி ஆண்டுக்கு அரசு அறிமுகம் செய்தது. இதற்காக ரூ.200 கோடி செலவில் 9 கோடி பாட புத்தகங்களை தமிழக அரசு அச்சடித்துள்ளது.

இந்த நிலையில் தேர்தலில் முந்தைய ஆளும் கட்சி தோல்வி அடைந்து, அ.தி.மு.க. கட்சி தலைமையில் தமிழகத்தில் அரசு அமைந்துள்ளது. இந்த அரசு தற்போது சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதை நிறுத்தி வைத்துவிட்டது. மேலும் பழைய கல்விமுறையையே பின்பற்றுவதற்கும் புதிய அரசு முடிவு செய்துள்ளது. சமச்சீர் கல்வி தொடர்பாக புதிய நிபுணர் குழுவை அமைக்கவும் அரசு தீர்மானித்துள்ளது.

இந்த முடிவுகள் பொதுமக்கள் நலனுக்கு எதிரானவை. எந்த ஒரு நிபுணர்களின் ஆலோசனையையும் பெறாமலேயே இந்த முடிவை தமிழக அரசின் அமைச்சரவை எடுத்துள்ளது. சமச்சீர் கல்வியை அறிமுகம் செய்வதில் ஏற்கனவே நிபுணர் குழு அமைக்கப்பட்டு, அதன் அறிக்கையை பெற்று அதை விரிவாக விவாதித்த பிறகுதான் அதற்கான சட்டத்தை முந்தைய அரசு கொண்டு வந்தது.

தற்போது பழைய கல்வி முறைக்கான புத்தகங்களை மீண்டும் அச்சடிப்பதற்காக பள்ளிக்கூடங்களின் திறப்பு நாளை அரசு தள்ளி வைத்துள்ளது. சமச்சீர் கல்வி முறையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று இந்த அரசு எடுத்துள்ள முடிவு முற்றிலும் அரசியல் சார்பானது.

அரசின் கொள்கை முடிவு என்று கூறி தமிழக அரசு தப்பிக்க முடியாது. பல கோடி ரூபாய் செலவு செய்து முந்தைய அரசால் கொண்டுவரப்பட்ட இந்த கல்வி முறையை புதிய அரசு உடனடியாக தவிர்க்கக் கூடாது. எனவே சமச்சீர் கல்வி முறைக்கு எதிராக அமைச்சரவை எடுத்த முடிவு சட்டவிரோதமானது.

மாணவர்கள் நலனோ, பொதுமக்களின் நலனோ அதில் இல்லை. மக்கள் வரிப்பணம்தான் வீணாக்கப்படுகிறது. சட்டப்பூர்வமாக எடுக்கப்பட்ட முடிவை நிர்வாக ரீதியாக மீற முடியாது. எனவே ஏற்கனவே உள்ள சட்டத்தின்படி தமிழகத்தில் சமச்சீர் கல்வியை தொடர்ந்து நடத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் எ‌ன்று மனு‌வி‌ல் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

இ‌ந்த மனு நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், கே.பி.கே.வாசுகி முன்னிலையில் இ‌ன்று ‌விசாரணை‌க்கு வ‌ந்தது. அ‌ப்போது, சம‌ச்‌சீ‌‌‌ர் க‌‌ல்‌வி ச‌ட்ட‌ம் இய‌‌ற்ற‌ப்ப‌ட்டிரு‌க்கு‌ம்போது அதனை ம‌ா‌ற்ற த‌மிழ அரசு முடிவு எடு‌ப்பது ச‌‌ரியா? எ‌ன்று கே‌ள்‌வி எழு‌ப்‌பிய ‌நீ‌திப‌திக‌ள், சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வி‌க்கு ஏ‌ற்கனவே ரூ.200 கோடி செல‌வி‌ட்டிரு‌க்கு‌ம்போது ‌மீ‌ண்டு‌ம் செலவா? எ‌ன ‌வின‌‌வின‌ர்.

சம‌‌‌ச்‌சீ‌ர் க‌ல்‌வியை அம‌ல்படு‌த்த‌க் கோரு‌ம் வழ‌க்‌கி‌ல் வரு‌ம் 8ஆ‌ம் தே‌தி ப‌தி‌ல் அ‌ளி‌க்க த‌மிழக அரசு‌க்கு ‌நீ‌திப‌திக‌ள் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளன‌ர்.

நன்றி: தமிழ்.வெப்துனியா.காம்

No comments: