Thursday, May 19, 2011

ஜெயலலிதாவின் நியாயமற்ற கோபம்!

புதுவை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ரங்கசாமி தனித்தே ஆட்சி என்று அறிவித்திருப்பதன் மூலம் அதிமுகவுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சி தனக்கு துரோகம் செய்துவிட்டது என்று கூறிய ரங்கசாமி, தேர்தலுக்குப் பிறகு அதே துரோகத்தை அதிமுகவுக்கு இழைத்திருக்கிறார்.

நடந்து முடிந்த புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்திந்திய அதிமுகவுடன் இணைந்து ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. தேர்தல் சமயத்தில், தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரசாரம் செய்த நான், புதுச்சேரிக்கு சென்று என். ரங்கசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய ஆதரவு அளிக்குமாறு புதுச்சேரி வாக்காளப் பெருமக்களைக் கேட்டுக் கொண்டேன்.

இது மட்டுமல்லாமல், தேர்தலுக்கு முன்பு அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதிமுக மீதும், என் மீதும் நம்பிக்கை வைத்தும், கழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை மனதில் வைத்தும் தான் புதுச்சேரி மக்கள் அதிமுக - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தனர். அதிமுக - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது.

கழகக் கூட்டணி வெற்றி பெற்றதும், புதுச்சேரி யூனியன் பிரதேச வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, புதுச்சேரி முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் என்.ஆர். ரங்கசாமி அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகளையும் நான் தெரிவித்திருந்தேன். ஆனால், ரங்கசாமி அவர்களுக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற எனக்கு வாழ்த்து தெரிவிக்கக்கூட மனமில்லை. நன்றி மறந்து நாணயமற்ற முறையில் நடந்து கொண்டிருக்கிறார் ரங்கசாமி. எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை என்ற வள்ளுவரின் வாய்மொழியை இந்தத் தருணத்தில் நான் அவருக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அதிமுக ஆதரவுடனும், செல்வாக்குடனும் வெற்றி பெற்றுவிட்டு ஆட்சி அமைக்க துணைநிலை ஆளுநரிடம் உரிமை கோரச் செல்லும் போது ஒரு வார்த்தை கூட எனக்குத் தெரிவிக்காமல், கழக வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேட்சை உறுப்பினரின் ஆதரவுடன் என்.ஆர். காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சி அமைத்திருப்பது கூட்டணி தர்மத்திற்கு விரோதமான செயல் ஆகும். நம்ப வைத்து மோசடி செய்துவிட்டார் ரங்கசாமி. முதுகில் குத்துவதில் எல்லோரையும் மிஞ்சிவிட்டார் ரங்கசாமி. கூட்டணிக் கட்சியுடனேயே நாணயமற்ற முறையில் நடந்து கொண்டுள்ள ரங்கசாமி மக்களுக்கு என்ன நன்மை செய்யப் போகிறார்? புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் ஏமாற்று நடவடிக்கைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்

ஜெயலலிதா கோபப்படுவதில் எந்தவித நியாயமும் இல்லை என்பதும் புதுச்சேரி மாநிலத்தில் அ.தி.மு.க.வின் செல்வாக்கு என்ன என்பதும் புதுச்சேரி மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

தமிழக மக்கள் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதற்காகத்தான் வேறு வழியின்றி அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர். ஜெயலலிதாவின் கடந்த கால ஆட்சியைப் பார்த்து தமிழக மக்கள் வாக்களிக்க வில்லை என்பதுதான் உண்மை.

ஆனால் புதுச்சேரி மக்கள் ரங்கசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகத்தான் வாக்களித்தனர்.

புதுச்சேரி அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் ரங்கசாமியின் படத்தைப்போட்டு..

“ரங்கசாமி முதலமைச்சராக எனக்கு வாக்களியுங்கள்”...

“நான் தேர்தலில் நிற்கவில்லை ரங்கசாமிதாம்மா என்ன நிக்க வச்சாரு.. ”

“நான் அ.தி.மு.க. வேட்பாளரா வரவில்லை ரங்கசாமியின் வேட்பாளராகத்தான் உங்களிடம் வந்துள்ளேன்”...

அதனால எனக்கு இரட்டை இலையில ஓட்டு போடுங்க...”


என்று கூறித்தான் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் மக்களிடம் வாக்கு கேட்டனர். அதனாலேயே அவர்களும் வெற்றி பெற்றனர்.

புதுச்சேரியில் ரங்கசாமியை தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து போட்டியிட்டிருந்தாலோ, அல்லது அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டிருந்தாலோ அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் டெப்பாசிட் தொகையை இழந்திருப்பார்கள். இந்த உண்மை தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவருக்கும் தெரியும்... இந்த உண்மை ஜெயலலிதாவிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை...

2 comments:

johnchristdhas said...

what you said is correct.people of puduchery votted only for Mr.Rengasamy forhis simplicity during his previousregime So mummy has no right to get angry @@@@@@!!!!!!!!!!!.

veera said...

What JJ claims is a apex of jealousness ..We voted for NR and not for anybody!! People of Pondicherry knows very well about Rangasamy than JJ.!! she should feel happy that she got 4 seats in PY because it PY , it is always between COngress and DMK..